வளர்ச்சி பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு
கல்வராயன்மலையில் வளர்ச்சி பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு செய்தாா்.
கச்சிராயப்பாளையம்:
கல்வராயன்மலையில் வேங்கோடு ஊராட்சிக்குட்பட்ட மொட்டையனூர் கிராமத்தில் ரூ.4½ லட்சம் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணி முடிந்துள்ளது. இதை மாவட்ட திட்ட இயக்குனர் மணி ஆய்வு செய்தார். அப்போது பணிகள் தரமாக உள்ளதா? என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவர் தொடர்ந்து கல்வராயன்மலையில் கரியாலூர் கிராமத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாலை பணி மற்றும் கரியலூர் சிறுவர் பூங்கா அருகே ஊரக வளர்ச்சி துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் நர்சரி ஆகியவற்றையும் பார்வையிட்டார். ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, உதவி பொறியாளர் அருண் ராஜா, ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணி கிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.