ஆம்பூர் பகுதியில் வளர்ச்சி பணிகளை திட்ட இயக்குனர் நேரில் ஆய்வு

ஆம்பூர் பகுதியில் வளர்ச்சி பணிகளை திட்ட இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2023-05-05 18:11 GMT

ஆம்பூர்

ஆம்பூர் பகுதியில் வளர்ச்சி பணிகளை திட்ட இயக்குனர் நேரில் ஆய்வு செய்தார்.

ஆம்பூர் அருகே துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள சுடுகாட்டிற்க்கு சுற்றுச்சுவர், அரசு பள்ளிக்கு கழிப்பறை வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி உள்ளிட்ட கட்டுமான பணி நடந்து வருகிறது. இதனை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பழையமனை பகுதிக்கு நடைப்பயிற்சி பூங்காவும், செயல்படாத அங்கன்வாடி மையத்தினையும் செயல்படுத்த அறிவுறுத்தினார். மேலும் அப்பகுதியில் பழுதடைந்து இருந்த குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் சமுதாயக்கூடத்தை இடித்து விட்டு புதிதாக கட்ட உத்தரவிட்டார்.

கீழ்கன்றாம்பல்லி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு கழிப்பறை வசதி மற்றும் அதே பகுதியில் புதிய ரேஷன் கடை அமைக்கும் இடத்தினையும் பார்வையிட்டார். ஆய்வின்போது முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் எம்.டி. சீனிவாசன், ஊராட்சி மன்ற தலைவர் சுவிதா கணேஷ், துணைத் தலைவர் விஜய், ஊராட்சி செயலாளர் பாலகிருஷ்ணன், ஊராட்சி உறுப்பினர்கள் குமரேசன், விஜய், அண்ணாதுரை, விஜயா, பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்