கடையம் அருகே திட்ட இயக்குனர் ஆய்வு

கடையம் அருகே ரவணசமுத்திரம் பகுதியில் திட்ட இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2023-01-07 18:45 GMT

கடையம்:

கடையம் அருகே உள்ள ரவணசமுத்திரம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் வளர்ச்சி நிதியில் இருந்து கட்டப்பட்டுள்ள நூலக கட்டிடம், புதிய சுகாதார பொது கழிப்பிடம் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்ட இடம், நமது கிராம பூங்கா ஆகியவற்றை தென்காசி மாவட்ட திட்ட இயக்குனர் மைக்கேல் அந்தோணி பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது அவரிடம், நமது கிராம பூங்காவுக்கு சுற்றுச்சுவர் மற்றும் நடைபாதை தளம் அமைக்க வேண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர் முகமது உசேன் கோரிக்கை விடுத்தார். அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக அவர் உறுதி அளித்தார்.

ஒன்றிய ஆணையாளர் ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலை முருகன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராமலட்சுமி சங்கிலி பூதத்தார், பொறியாளர்கள் ராதாகிருஷ்ணன், உமாதேவி சேவாலயா சங்கிலி பூதத்தார், சமுதாய தலைவர் பரமசிவன், வாசகர் வட்ட தலைவர் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற செயலாளர் மாரியப்பன் செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்