கச்சா எண்ணெய்க் குழாயில் பராமரிப்பு பணிக்கு தடை... ஆட்சியர் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை

கச்சா எண்ணெய்க் குழாயில் எந்த பணியையும் மேற்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தமிழக சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.;

Update: 2023-03-12 18:01 GMT

நாகை,

நாகையில் வரும் 16-ஆம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் வரை, சிபிசிஎல் நிறுவனம், கச்சா எண்ணெய்க் குழாயில் எந்த பணியையும் மேற்கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தமிழக சுற்றுச் சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

நாகை மாவட்டம், நாகூரில் கச்சா எண்ணெய்க் குழாய் கடந்த 2-ஆம் தேதி உடைந்தபோது, சிபிசிஎல் நிர்வாகம் அதை சரிசெய்தது. அதைத் தொடர்ந்து, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

ஆனால், தடையை மீறி கச்சா எண்ணெய் குழாயை சிபிசிஎல் நிர்வாகம் சுத்தம் செய்ததால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த பகுதிகளை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டார்.

 

Tags:    

மேலும் செய்திகள்