காரைக்குடி
கல்லல் ஊராட்சி ஒன்றியம் பொய்யலூர் ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் திவ்ய நாதன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராதிகா முன்னிலை வகித்தார். இதில் பள்ளி குழந்தைகள் ஊராட்சி பொதுமக்கள் மற்றும் மகளிர் மன்ற உறுப்பினர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர் அழகு மீனாள் ஊராட்சி செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் ஊராட்சி பகுதிகளில் முற்றிலும் பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது.