குறைந்த மின்னழுத்தத்தால் பழுதடைந்த பொருட்கள்

திருக்கோவிலூர் பகுதியில் குறைந்த மின்னழுத்தத்தால் பொருட்கள் பழுதடைந்தன.

Update: 2023-08-04 18:45 GMT

திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக குறைந்த அழுத்தத்தில் மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் நிறைய வீடுகளில் மின்சாதன பொருட்கள் பழுதடைந்துள்ளன. இது குறித்து மின்வாரியத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, எங்களுக்கே குறைந்த அளவிலான மின்னழுத்தம் கொண்ட மின்விநியோகம் தான் கிடைக்கிறது என்றனர். திருக்கோவிலூர் பகுதியில் சீரான மின் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்