சேலம் சுகவனேசுவரர் கோவிலில் பழமை மாறாமல் திருப்பணிகள் செய்யக்கோரி சிவனடியார்கள் ஊர்வலம்

சேலம் சுகவனேசுவரர் கோவிலில் பழமை மாறாமல் திருப்பணிகள் செய்யக்கோரி சிவனடியார்கள் ஊர்வலமாக சென்றனர்.

Update: 2022-08-28 22:07 GMT

சேலம் சுகவனேசுவரர் கோவிலில் வருகிற 7-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இந்தநிலையில் கோவிலில் திருப்பணிகள் செய்தபோது, சில சாமி சிலைகள் சேதடைந்துள்ளதாகவும், அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், பழமை மாறாமல் திருப்பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தியும் சிவனடியார்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஊர்வலம் நடந்தது. அப்போது, சிவன், பார்வதி போன்ற கடவுள் வேடம் அணிந்து பக்தர்களும், சிவனடியார்களும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அவர்கள் கோவிலில் சிவ வாத்தியங்களை இசைத்து தங்களது கோரிக்கைகள் தொடர்பாக சுகவனேசுவரர், சொர்ணாம்பிகை அம்மன் சன்னதி முன்பு மனமுருக வழிபட்டனர்.

இதுகுறித்து சிவனடியார்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூறும் போது 'கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகளை செய்வதற்கு நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால் சீரமைப்பு பணிகள் செய்தபோது, சில சாமி சிலைகள் உடைக்கப்பட்டு இருப்பதை கோவில் அதிகாரிகள் மறைத்துள்ளனர். எனவே கோவில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலில் பழமை மாறாமல் மரபுப்படி சீரமைத்து திருப்பணிகளை செய்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்' என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்