கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு

பாவூர்சத்திரத்தில் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2022-12-19 18:45 GMT

பாவூர்சத்திரம்:

நெல்லை, தென்காசி ஒருங்கிணைந்த உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பில், தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் 45-வது பிறந்தநாளையொட்டி கிரிக்கெட் போட்டி பாவூர்சத்திரம் குருசாமிபுரம் சூப்பர் பிரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழா பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது. கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் க.சீனித்துரை தலைமை தாங்கினார். பஞ்சாயத்து தலைவர் ராஜ்குமார், நற்பணி மன்ற மாவட்ட தலைவர் ஈஸ்வரன், பொருளாளர் மாடசாமி கண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

போட்டியில் முதலிடம் பெற்ற தென்காசி இந்தியன் ஸ்போர்ட்ஸ் அணிக்கு, உதயநிதி மன்ற மாவட்ட துணை செயலாளர் சிவ.அருணன் சார்பில் ரூ.25,045-ம், 2-ம் இடம் பெற்ற குருசாமிபுரம் சூப்பர் பிரண்ட்ஸ் அணிக்கு மன்ற ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.செந்தில்குமார் சார்பில் ரூ.10,045-ம், 3-ம் இடம் பெற்ற வீரவநல்லூர் செயின்ட் ஜான்ஸ் கல்லூரி அணிக்கு மன்ற மாவட்ட துணை செயலாளர் கே.வைரசாமி சார்பிலும், 4-ம் இடம் பெற்ற கல்லூரணி ராயல் பிரண்ட்ஸ் அணிக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் பி.என்.எஸ்.விஜயன் சார்பில் ரூ.10,045-ம் வழங்கப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் வெற்றிக்கோப்பையை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்