விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

கீழஆம்பூரில் பொங்கல் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2023-01-19 18:45 GMT

கடையம்:

கீழஆம்பூர் ஊராட்சி மஞ்சபுளி தெருவில் உள்ள ஜீவா மன்றமும், கூட்டுப்பண்ணையம் விவசாயிகள் ஆர்வலர் குழுவும் இணைந்து 73-வது பொங்கல் விளையாட்டு போட்டியை 3 நாட்கள் நடத்தின. நிகழ்ச்சிக்கு ஊர் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். கூட்டுப்பண்ணையம் உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் சிவபெருமாள் முன்னிலை வகித்தார். நிறைவு நாள் நிகழ்ச்சியில் வேளாண்மை உதவி அலுவலர் கமல்ராஜன், கூட்டுப்பண்ணையம் தென்பொதிகை நிறுவனத்தின் இயக்குனர் ரவிபாலன் ஆகிேயார் கலந்து கொண்டு, கடந்த ஆண்டு 10, 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளுக்கும், விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகளை வழங்கினார். நடுவராக ஆசிரியர் பாலசுப்பிரமணியன் செயல்பட்டார். முடிவில் கதிரேசன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை ஜீவா மன்ற தலைவர் பாலசுந்தரம், செயலாளர் வெங்கடேஷ், பொருளாளர் இசைஆனந்தன், ஊர் துணை தலைவர் கருப்பசாமி, சுரேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்