கால்பந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

கால்பந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் வளர்மதி பரிசு வழங்கினார்.

Update: 2023-05-23 18:39 GMT

ராணிப்பேட்டையில் திருமலை அறக்கட்டளை மற்றும் கிரேட் கோல்ஸ் அறக்கட்டளை இணைந்து நடத்திய கிராம பெண் குழந்தைகளுக்கான கால்பந்து போட்டியில் சிறப்பாக விளையாடிய பெண் குழந்தைகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

வாழ்க்கையில் வெற்றி, தோல்வி. எதிர்பார்ப்புகள் நிறைவேறாத சூழல் ஏற்படலாம். விளையாட்டு வீரர்களுக்கு போட்டியில் வெற்றி, தோல்வியை எதிர்கொள்ளும் பொழுது தன்னுடைய மன தைரியம் வலிமை படுகிறது. விளையாட்டுப் போட்டிகளில் ஏற்படும் இந்த அனுபவம் அவர்களின் வாழ்க்கையிலும் அனைத்தையும் எதிர்கொள்ள பழக்கப்படுத்தி விடுகிறது. குழந்தைகள் சுயமாக முடிவுகளை எடுக்கக்கூடிய அறிவு வளர விளையாட்டு போட்டிகள் மிகவும் அவசியம். அந்த வகையில் திருமலை அறக்கட்டளை சார்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சிக்கு பெண் குழந்தைகள் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

விளையாட்டு போட்டியில் நன்றாக விளையாடியும், அதே போல படிப்பிலும் சிறந்து விளங்கவும் வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி டாக்டர் கல்பனா கோபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்