போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு

தச்சநல்லூரில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Update: 2023-01-27 22:02 GMT

பேட்டை:

கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் 43 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட ரிச் ஹவுசிங் ப்ராபர்ட்டீஸ் மற்றும் பில்டர்ஸ் நிறுவனத்தினர் புதிதாக தச்சநல்லூரில் ரிச் கிராண்ட் சிட்டி என்ற புதிய மனை பிரிவை உருவாக்கி விற்பனை செய்து வருகின்றனர். அங்கு தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

ரிச் ஹவுசிங் நிறுவனங்களின் தலைவர் அருணாசலம் என்கிற மணி பாண்டியன் தலைமை தாங்கினார். ரிச் நிறுவனங்களின் சேர்மன்கள் ஏ.ஆர்.ஆதிகார்த்திக், ஏ.ஆர்.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரிச் டீம் லீடர்கள் ஜெய்லானி, காசிம், காதர் ஒலி, சங்கர், அய்யூப் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ரிச் டீம் குழுவினர்களுடன் இணைந்து பொங்கல் வைக்கும் விழா நடந்தது. தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடந்தது.

போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கோலப்பட்டியில் வென்றவர்களுக்கு மிக்சி, மின்விசிறியும், நுண்ணறிவு போட்டியில் வென்றவர்களுக்கு கியாஸ் அடுப்பும் வழங்கப்பட்டது. விளையாட்டு போட்டிகளில் வென்றவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. ரிச் ஹவுசிங் சேர்மன் ஏ.ஆர்.ஆதி கார்த்திக் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்