மாவட்ட கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
மாவட்ட கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
இட்டமொழி:
நாங்குநேரி அருகே உள்ள காரங்காட்டில் நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற வடக்கன்குளம் அணிக்கு நாங்குநேரி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் எஸ்.ஆரோக்கிய எட்வின் பரிசு வழங்கினார். 2-ம் இடம் பிடித்த நெல்லை அணிக்கு மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணுவும், 3-ம் இடம் பிடித்த திசையன்விளை அணிக்கு மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணியும் பரிசு வழங்கினர்.