திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு

ரத்தினகிரியில் திருக்குறள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Update: 2022-11-26 13:26 GMT

ஆற்காடு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட உலக திருக்குறள் பேரவை சார்பில் ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி பாலமுருகன் கோவில் மலையடிவாரத்தில் உலக திருக்குறள் பேரவை சார்பில் திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட உலக திருக்குறள் பேரவை தலைவர் ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள் தலைமை தாங்கினார்.

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கரபாண்டியன் முன்னிலை வகித்தார். உலக திருக்குறள் பேரவை செயலாளர் கவிஞர் மா.ஜோதி வரவேற்றார். எழுத்தாளர் ஆரணி பவித்ராநந்தகுமார் உரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக உலக திருக்குறள் பேரவை தலைவர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் திருக்குறள் போட்டியில் ெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

இதில் கலவை சச்சிதானந்த சுவாமிகள், ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தொழிலதிபர் சவுக்கத்அலி, ஆற்காடு மகாத்மா காந்தி இலவச முதியோர் இல்ல தலைவர் ஜே.லட்சுமணன், புலவர் பதுமனார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் உலக திருக்குறள் பேரவை பொருளாளர் சிவனார் அமுது நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்