கோவில்பட்டியில்கோலாட்டம் நடத்திய சிறுவர்களுக்கு பரிசு:டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் வழங்கியது
கோவில்பட்டியில்கோலாட்டம் நடத்திய சிறுவர்களுக்கு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் பரிசு வழங்கியது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வேலாயுதபுரம் பத்திரகாளி அம்மன், காளியம்மன் கோவிலில் ஆடி பொங்கல் விழாவையொட்டி கோலாட்டம் நடத்திய சிறுவர்-சிறுமிகளுக்கு பரிசுகளும், கலந்துகொண்ட பெண்களுக்கு மங்களப்பொருட்களும் வழங்கும் நிகழ்ச்சி, தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் கோவில்பட்டி வேலாயுதபுரம் கிளை சார்பில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைத்தலைவர் என்ஜினீயர் தவமணி தலைமை தாங்கினார். நகரசபை கவுன்சிலர் லவராஜா சிறுவர்-சிறுமிகளுக்கு பரிசுகள் வழங்கினார். நகரசபை கவுன்சிலர் ஜேஸ்மின் லூர்து மேரி, தி.மு.க. சிறுபான்மை அணி மாவட்ட துணை அமைப்பாளர் அமலி பிரகாஷ், வக்கீல் பாரதி ஆகியோர் பெண்களுக்கு மங்களப்பொருட்களை வழங்கினர். நிகழ்ச்சியில் ராகவேந்திரா அறக்கட்டளை தலைவர் எம்.சீனிவாசன், எஸ்.அமிர்த வல்லி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற வேலாயுதபுரம் கிளை தலைவர் ஏ.முருகன் செய்திருந்தார்.