தனித்திறன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

தனித்திறன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.;

Update:2023-04-01 00:58 IST

தாயில்பட்டி, 

தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த கோட்டையூர் இந்து மறவர் நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் வெங்கிடசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

இதில் அ.தி.மு.க. வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர்கள் (கிழக்கு) தங்கவேலு, (மேற்கு) மணிகண்டன், ஒன்றிய கவுன்சிலர் சந்திரன், நிர்வாகிகள் புதுராஜ், ராஜேஷ், தங்கத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்