மாநில கலைத்திருவிழா போட்டியில் சாதித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு

மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலர் பரிசு வழங்கினார்.

Update: 2023-01-16 18:45 GMT

சிவகங்கை,

மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டியில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கல்வி அலுவலர் பரிசு வழங்கினார்.

கலைத்திருவிழா

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் திறமையை வெளிப்படுத்த மாவட்டம்தோறும் கலைத்திருவிழா நடத்தபட்டது.இதில் மாவட்டஅளவில் தேர்வான மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு அனுப்பப்பட்டனர். இதில் சிவகங்கையை அடுத்துள்ள காஞ்சிரங்கால் அரசு பள்ளியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவிகள் ஸ்ரீயா, ஜோயல்ஆல்வின், 7-ம் வகுப்பு மாணவி கவியரசி, மாணவர் சிவசந்தானம், 6-ம் வகுப்பு மாணவர்கள் சந்துரு, முகுந்தன், சந்தானவேல், மாணவிகள் சோஷிகா, தாரணிகா ஆகிய 9 பேர் கொண்ட குழுவினர் மாநில அளவிலான கலை திருவிழாவில் பங்கேற்றனர்.

இவர்கள் கிராமிய கலைகள் என்கிற தலைப்பில் பாரம்பரிய நடனமான கரகம், காவடி, சிலம்பம், பறையிசை, கொம்புவாத்தியம் உள்ளிட்டவைகளை இசைத்து மாநில அளவில் 2-ம்இடத்தை பெற்றனர். இதையொட்டி இவர்களுக்கு சென்னையில் நேரு விளையாட்டு அரங்கில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசு வழங்கினார்.

பரிசு

இதையொட்டி அவர்களுக்கு பாராட்டு விழா காஞ்சிரங்காலில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து தலைமையில் நடைபெற்றது. தலைமைஆசிரியர் பாண்டியராணி வரவேற்று பேசினார். மாவட்ட கல்வி அலுவலர் முத்துச்சாமி சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கும் பயிற்றுவித்த ஆசிரியை பாண்டி செல்வி ஆகியோருக்கு பரிசுகள் வழங்கினார்.

இதே போல் ஊராட்சி மன்ற தலைவர் சார்பிலும் பரிசுகள் வழங்கபட்டன. இதையொட்டி மாணவ மாணவிகள் மாநில போட்டியில் செய்து காட்டிய நிகழ்ச்சிகளை பொதுமக்கள் முன்னிலையில் செய்து காட்டினார்கள். நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த கல்வி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயூ, வட்டார கல்வி அலுவலர் வளர்மதி கிரேஸ், ஊராட்சி உறுப்பினர்கள் ராஜா, சதீஸ், சரிதா, ஊராட்சி செயலர் மணிகண்டன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்