குப்பைகளை தரம்பிரித்து வழங்கியவர்களுக்கு பரிசு

காரியாபட்டியில் குப்பைகளை தரம்பிரித்து வழங்கியவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2022-09-14 19:59 GMT

காரியாபட்டி, 

காரியாபட்டியில் குப்பைகளை தரம்பிரித்து வழங்கியவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

காரியாபட்டி பேரூராட்சியில் குப்பையை தரம் பிரித்து வழங்குதல் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி பேரூராட்சி தலைவர் செந்தில் தலைமையிலும், பேரூராட்சி செயல் அலுவலர் ஸ்ரீ ரவிக்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது. அனைத்து கவுன்சிலர்களுக்கும், பேரூராட்சி அலுவலகத்தில் பயிற்சி மற்றும் விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. இதில் எனது குப்பை என் பொறுப்பு என உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.

நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் உரப்பூங்காவில் உரம் தயாரித்தல், குப்பைகளை தரம் பிரிப்பது, திடக்கழிவு மேலாண்மை குறித்து செயின்ட் மேரீஸ் பள்ளி மாணவர்கள், மகளிர்குழு பெண்கள் ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

குடும்பத்தலைவிகளுக்கு பரிசு

பின்பு அனைத்து வார்டுக்குட்பட்ட பகுதிகளுக்கும் வீடு வீடாக சென்று குப்பைகள் தரம் பிரிப்பது பற்றி துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நல்ல முறையில் குப்பைகளை தரம் பிரித்த குடும்பத்தலைவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சங்கரேஸ்வரன், சரஸ்வதி பாண்டியராஜன், தீபா பாண்டியராஜன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்