விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசு

சிவகிரியில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Update: 2023-09-12 18:45 GMT

சிவகிரி:

சிவகிரி சேனைத்தலைவர் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகள், சிவகிரி மற்றும் வாசுதேவநல்லூர் வட்டார அளவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். அவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் சிதம்பரநாதன் கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பரிசுப்பொருள், கோப்பை, சான்றிதழ்களை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சிக்கு சிவகிரி சேனைத்தலைவர் மகாஜன சங்க தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். பள்ளியின் செயலாளர் தங்கேஸ்வரன், பொருளாளர் ஆறுமுகம், துணைத்தலைவர் மூக்கையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சக்திவேல் வரவேற்று பேசினார். உடற்கல்வி ஆசிரியர் சண்முகவேலு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் இசக்கிமுத்து, கல்விக்குழு உறுப்பினர்கள், அறப்பணி குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் இசக்கி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்