சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2022-09-07 20:27 GMT

காரியாபட்டி, 

காரியாபட்டி அருகே பிசிண்டி ஊராட்சியில் உலக பாரம்பரிய சிலம்பாட்ட போட்டி நடைபெற்றது. பிசிண்டி சிலம்பாட்ட பள்ளி மற்றும் கனிமவள சுற்றுச்சூழல் விவசாய சங்கமும் இணைந்து ஒன்றிய அளவில் சிலம்பாட்ட போட்டி அரசு பள்ளி வளாகத்தில் நடத்தியது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவிற்கு பிசிண்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி பாண்டி பெருமாள் தலைமை தாங்கினார். சமூக ஆர்வலர் ஜெயக்குமார், முத்துராஜா, அன்னை தெரசா இளைஞர் நற்பணி மன்ற தலைவர் அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி பாண்டி பெருமாள் பரிசுகள் வழங்கினார். 2 நாட்கள் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டிகளில் பல்வேறு கிராமங்களில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் கனிமவள நீர்வள சுற்றுச்சூழல் சங்க மாவட்ட தலைவர் திருமலை கலந்து கொண்டார். போட்டிக்கான ஏற்பாடுகளை பயிற்சியாளர்கள் கண்ணன், மணிகண்டன், சின்னமணி, அபிமன்யூ ஆகியோர் செய்திருந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்