மாவட்ட ஆக்கி போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு

கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலத்தில் நடந்த மாவட்ட ஆக்கி போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கப்பட்டது.

Update: 2023-01-03 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டியை அடுத்துள்ள பாண்டவர் மங்கலம் ஆக்கி மைதானத்தில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் அய்யாச்சாமி நினைவு 17-ம் ஆண்டு மாவட்ட ஆக்கிப் போட்டி நடந்தது. போட்டியில் 15 அணிகள் பங்கேற்றன. இறுதிப்போட்டியில் பாண்டவர்மங்கலம் ஏ அணியும், இலுப்பையூரணி அணியும் மோதியது. இதில் பாண்டவர்மங்கலம் அணி 3- 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முன்னதாக நடந்த 3, 4-வது இடத்திற்கான போட்டியில் பாண்டவர் மங்கலம் பி அணியும், கோவில்பட்டி யங்சேலஞ்சர்ஸ் அணியும் மோதியது. இதில் பாண்டவர் மங்கலம் பி அணி 4- 3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு பாண்டவர்மங்கலம் ஆக்கி அணி செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். வெற்றி பெற்ற அணிகளுக்கு சுழற்கோப்பை மற்றும் முறையே ரூ.5 ஆயிரம், ரூ.4 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் ரொக்கப் பரிசுகளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அன்புராஜ் வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் ஆக்கி வீரர்கள் பொன்மணி, தமிழரசன், ஒன்றிய கவுன்சிலர் பொன்னுத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டார்கள். தேசிய ஆக்கி நடுவர் முருகன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்