பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கலெக்டர் பரிசு வழங்கினார்.

Update: 2022-10-18 17:40 GMT

மகாத்மா காந்தி பிறந்தநாளையொட்டி திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்ற 8 பேருக்கு பரிசளிப்பு விழா திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

நிகழ்ச்சியில் பரிசு மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் அமர்குஷ்வாஹா வழங்கி பேசினார். இதில் தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் ராஜேசுவரி, தமிழ் வளர்ச்சித் துறை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், காந்தியடிகளின் பிறந்தநாளையொட்டி நடந்த பேச்சுப்போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, முதலிடம் பிடித்த மாணவ- மாணவிகளுக்கு ரூ.5 ஆயிரம் ஆயிரம், இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.3 ஆயிரம், மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்