தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
நாகையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பெண்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (புதன்கிழமை) நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது. இதில் . பட்டப்படிப்பு அல்லது 12-ம் வகுப்பு முடித்த 21 வயதுக்குட்பட்ட பெண்கள் மட்டும் கலந்து கொள்ள வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய அனைத்து கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றுடன் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.