41 ஆண்டுகளாக தலைமறைவான 2 பேரை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைப்பு
நெல்லையில் வழிப்பறி, திருட்டு வழக்கில் 41 ஆண்டுகளாக தலைமறைவான 2 பேரை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
நெல்லை சந்திப்பு பகுதியில் கடந்த 1981-ம் ஆண்டு வழிப்பறி, திருட்டு மற்றும் மோசடியில் ஈடுபட்ட வழக்கு தொடர்பாக தலைமறைவான நெல்லை டவுனைச் சேர்ந்த பெருமாள்நாயுடு மகன் பிச்சையா, பனவடலிசத்திரம் மீன்துள்ளியைச் சேர்ந்த சின்னப்பா நாச்சியார் மகன் சுப்பையா ஆகியோரை கைது செய்ய நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் உத்தரவின்பேரில், நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கும் சென்று தீவிர விசாரணை நடத்தி, தலைமறைவான பிச்சையா, சுப்பையா ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள்.