தனியார் மருத்துவமனை காவலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-05-30 20:35 GMT

திருச்சி காந்திமார்க்கெட் வரகனேரி நடுத்தெருவை சேர்ந்தவர் அங்குசாமி (வயது 56). இவர் தில்லைநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காவலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு அளவுக்கு அதிகமாக கடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவ்வப்போது மதுகுடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து அவரது மனைவி அருணேஸ்வரி கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்தநிலையில் அங்குசாமி வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அருணேஸ்வரி காந்திமார்க்கெட் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்