தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தாராசுரத்தில் 11-ந் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது

Update: 2022-06-01 21:11 GMT

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தஞ்சை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 11-ந் தேதி (சனிக்கிழமை) காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தாராசுரம் கே.எஸ்.கே. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் நடக்கிறது..

இந்த முகாமில் சென்னை, திருப்பூர், கோவை, திருச்சி, தஞ்சை மற்றும் கும்பகோணம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. முகாமில் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ., பட்டதாரிகள், நர்சிங் மற்றும் பி.இ. முடித்து விட்டு வேலை தேடுவோருக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்பினை அளிக்க உள்ளனர்.

எனவே தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த வேலைதேடும் இளைஞர்கள் தங்களின் சுயவிவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை மற்றும் இதர சான்றிதழ் நகல்களுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இதில், கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களது சுயவிவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





Tags:    

மேலும் செய்திகள்