விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலி

நெல்லை அருகே விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

Update: 2022-05-28 19:47 GMT

நெல்லை:

நெல்லை அருகே உள்ள மேலமுன்னீர்பள்ளம் பகுதியை சேர்ந்த சங்கரன் மகன் கணேசன் (வயது 28). இவர் கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தரக்கட்டுப்பாட்டு மேலாளராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இவர் மோட்டார் சைக்கிளில் அந்த வளாகத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அங்கு நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் கணேசன் பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்