தனியார் நிறுவன ஊழியர் சாவு

திண்டுக்கல் அருகே லாரி-மோட்டார் சைக்கிள் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

Update: 2023-08-20 19:45 GMT

திண்டுக்கல்லை அடுத்த காப்பிளியபட்டியை சேர்ந்தவர் திருமால்சாமி. இவரது மகன் கணேஷ்குமார் (வயது 25). இவர், தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கணேஷ்குமார் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் காப்பிளியபட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். திண்டுக்கல் சீலப்பாடி பைபாஸ் சாலை பகுதியில் அவர் வந்தபோது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட கணேஷ்குமார் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கணேஷ்குமார் நேற்று இறந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்