தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
குளித்தலை அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தனியார் நிறுவன ஊழியர்
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மேலக்குட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 35). இவர் கரூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி கனிஷ்கா (10), ஜீவா (7) என்கின்ற குழந்தைகள் உள்ளனர்.
ஜாதகம் பார்த்ததில் நேரம் சரியில்லை என்ற காரணத்தினால் இவரது மனைவி செந்தாமரை தனது குழந்தைகளுடன் அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
தற்கொலை
இந்தநிலையில் நேற்று முன்தினம் தனது மனைவி குழந்தைகளை பார்த்து விட்டு வருவதாக கிருஷ்ணமூர்த்தி தனது பெற்றோரிடம் தெரிவித்துவிட்டு சென்றுள்ளார். ஆனால் அவர் நீண்ட நேரம் ஆகியும் வராத காரணத்தினால் அவர் தனியாக வசித்து வரும் வீட்டிற்குச் சென்று அவரது பெற்றோர் பார்த்துள்ளனர்.
அங்கு கிருஷ்ணமூர்த்தி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். கிருஷ்ணமூர்த்திக்கு அல்சர் காரணமாக வயிற்று வலி ஏற்படுமாம். அதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.