ரெயிலில் அடிபட்டு தனியார் பஸ் டிரைவர் சாவு
ரெயிலில் அடிபட்டு தனியார் பஸ் டிரைவர் சாவு
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே உள்ள திவான்சாபுதூரை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 31). இவர் தனியார் பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மீனாட்சிபுரம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி ரெயில்வே தண்டவாள பகுதியில் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு நோக்கி சென்ற ரெயில் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போத்தனூர் ரெயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.