கருமத்தம்பட்டி
கோவையில் இருந்து கருமத்தம்பட்டி- அவிநாசி வழியாக திருப்பூர் செல்லும் தனியார் பஸ் நேற்று கோவையில் இருந்து புறப்பட்டபோது கருமத்தம்பட்டியில் நிற்காது என்று பஸ்சில் ஏறிய பயணி ஒருவரை கீழே இறக்கி விட்டுள்ளனர்.
இந்த நிலையில் மாலையில் அந்த பஸ் கருமத்தம்பட்டிக்கு வந்த போது பொது மக்கள் திரண்டு வந்து, அந்த பஸ்சை நால்ரோட்டில் சிறைபிடித்தனர். இதனால் அங்கு, பரபரப்பு ஏற்பட்டது.இந்த சம்பவம் அறிந்து வந்த போலீசார் இரு தரப்பினரிடமும், பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் பஸ்சின் நடத்துனர், ஓட்டுனர் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து பஸ்சை பொது மக்கள் விடுவித்தனர்.