பிரதமர் மோடி பிறந்த நாள் விழா

தென்காசி மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2022-09-17 19:39 GMT

வாசுதேவநல்லூர்:

தென்காசி மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

வாசுதேவநல்லூர்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் யூனியன் தேவிபட்டினம் கிராமத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. வடக்கு ஒன்றிய பா.ஜ.க. தலைவர் சோழராஜன் கட்சி கொடியேற்றினார். கட்சி பிரமுகரும், தொழில் அதிபருமான விஸ்வை அ.ஆனந்தன் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெய கோதண்டராமன், ராயகிரி நகர தலைவர் கணேசன், சிவகிரி நகர தலைவர் ஒருசொல் வாசகன், ஒன்றிய துணைத்தலைவர்கள் மாடசாமி, சுப்பிரமணியன், கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் கருப்பையாதேவர், சுப்பிரமணியன், கருப்பசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக காலையில் தேவிபட்டிணம் தட்டாங்குளம் காளியம்மன் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடி பெயரில், கட்சி பிரமுகரும் தொழில் அதிபருமான விஸ்வை.அ.ஆனந்தன் ஏற்பாட்டில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து சிவகிரி பேரூராட்சி, வாசுதேவநல்லூர் யூனியன் விஸ்வநாதபேரி, தென்மலை, வடுகபட்டி, அருகன்குளம் புதூர், சத்திரம் இனாங்கோவில்பட்டி, மீனாட்சிபுரம், திருமலாபுரம், டி.ராமநாதபுரம், ராயகிரி பேரூராட்சி பகுதிகளில் கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

சுரண்டை

சுரண்டை நகர பா.ஜ.க. சார்பில் நடந்த விழாவுக்கு நகர தலைவர் அருணாசலம் தலைமை தாங்கினார். நகர பார்வையாளர் ரா.முருகேசன், முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் பாலகுரு நாதன் கட்சி கொடியேற்றினார். வர்த்தக பிரிவு மாநில செயலாளர் கோதை. எஸ்.மாரியப்பன் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினார்.

சுரண்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்த குழந்தைகளுக்கு மாநில விவசாயிகள் பிரிவு அமைப்பாளர் கமலா அருணாசலம், ஓ.பி.சி. அணி மாநில செயற்குழு உறுப்பினர் பிரியா ராஜூ, பி.கே.ஜி.ஆர்.வெங்கட் ரஜினி ஆகியோர் தங்க மோதிரம் வழங்கினர். முன்னதாக சுரண்டை சீனிவாச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.

செங்கோட்டை

செங்கோட்டை நகர பா.ஜ.க. இளைஞரணி சார்பில், சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் அரசு நடுநிலைப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. நகர தலைவா் வேம்புராஜ் தலைமை தாங்கினார். நகர பொதுச்செயலாளர்கள் கோமதிநாயகம், பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். தலைமை ஆசிரியா் சேவியா் அலெக்சாண்ட்ரியா வரவேற்று பேசினார்.

டாக்டர் கிருஷ்ணகுமார், 3-வது வார்டு நகர்மன்ற உறுப்பினா் சுடர்ஒளி ராமதாஸ், ஜே.சி.ஐ. தலைவா் ராமசுப்பிரமணியன் ஆகியோர் மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கி வாழ்த்தி பேசினா்.

கடையநல்லூர்

பிரதமர் மோடி பிறந்த நாள் விழாவையொட்டி, பா.ஜ.க. வெளிநாடுவாழ் மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவர் பாலீஸ்வரன் தலைமையில், கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு பழங்கள், பிஸ்கட் வழங்கப்பட்டது.

கடையம்

கடையம் அருகே பொட்டல்புதூரில் பா.ஜ.க. சார்பில் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு வேட்டி, சேலை மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மாநில பொதுக்குழு உறுப்பினர் கஜேந்திரன், ஒன்றிய தலைவர் ரத்தினகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்