ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்
ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கக்ேகாரி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தென்காசி மாவட்ட மையம் சார்பில் மாவட்ட செயலாளர் மாரிமுத்து விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிகின்ற ஆசிரியர்களுக்கு ஜனவரி மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. அரசால்நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்றும், முறையில் ஐ.எப்.ஹெச்.ஆர்.எம்.ஊதிய பட்டியல் தயாரிக்கப்படுகிறது என்றும், அரசு ஒதுக்கீடு செய்யும் ஊதிய பணம் இதுவரை உரிய கணக்கில் ஒதுக்கீடு செய்யப்படவில்லை எனவும் பதில் அளிக்கின்றனர்.
எனவே ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனையில் தமிழக அரசும், பள்ளி கல்வித்துறை அமைச்சரும், கல்வி துறையும் விரைந்து நடவடிக்கை எடுத்து அனைத்து ஆசிரியர்களுக்கும் ஊதியம் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டி முதற்கட்டமாக சுவரொட்டிஇயக்கமும் இரண்டாவது கட்டமாக 9.2.2023 அன்று மாலை 5 மணிக்கு தென்காசி மாவட்ட முதன்மைக்கல்விஅலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்துவது என்றும் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணியின் சார்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.