ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்
காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்;
விழுப்புரம்
விழுப்புரத்தில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில பொதுச்செயலாளர் தாஸ் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். இதில் துணை பொதுச்செயலாளர் கதிர்வேல், மாவட்ட செயலாளர் அறிவழகன், வட்டார தலைவர்கள் தாஸ், வசந்தராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு வழங்க நீதிமன்ற வழிகாட்டுதலுக்காக காத்திருக்காமல் அதற்காக அரசு கொள்கை முடிவை எடுத்து பழைய நிலையிலேயே பதவி உயர்வை வழங்க வேண்டும், தற்போது மாணவர்கள் சேர்க்கை காலம் என்பதால் தொடக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியை வழங்க வேண்டும், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஆசிரியர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கல்வியில் பின்தங்கியுள்ள விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓராசிரியர் பள்ளிகள் அதிகம் உள்ளன. சில நடுநிலைப்பள்ளிகளிலேயே 2 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். ஆகவே ஓராசிரியர் பள்ளி இல்லாமல் வகுப்புக்கு ஒரு ஆசிரியரை அரசு நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.