ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம்
ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம் நடந்தது
சிவகங்கை
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் காளையார்கோவிலில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் முருகன், மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார். மாவட்ட பொருளாளர் கலைச்செல்வி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஜோசபரோஸ், குமரேசன், கல்வி மாவட்ட செயலாளர்கள் சகாயதைனேஸ், சிங்கராயர், ஜெயக்குமார், கல்வி மாவட்ட தலைவர்கள் ஜோசப், பாலகிருஷ்ணன், மாவட்ட துணை தலைவர்கள் ரவி, ஸ்டீபன், துணை செயலார்கள் ஜான் அந்தோணி, அமலசேவியர், ஜீவா ஆனந்தி மற்றும் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தும் அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைவதற்கு அமைக்கப்பட்ட குழுவின் முடிவுகளை பெற்று அமல்படுத்த வேண்டும், ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதோடு கொள்கை முடிவும் எடுக்க வேண்டும், மாணவர்கள் நலன் கருதி காலை சிற்றுண்டி திட்டம் தொடர்பான பொறுப்புகளிலிருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.