ரூ.40 லட்சத்தில் ஆரம்ப துணை சுகாதார நிலையம் கட்டும் பணி
நுணாக்காடு ஊராட்சியில் ரூ.40 லட்சத்தில் ஆரம்ப துணை சுகாதார நிலையம் கட்டும் பணியை ஊராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்
திருத்துறைப்பூண்டி;
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நுணாக்காடு ஊராட்சியில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. எனவே இந்த பகுதியில் ஆரம்ப துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் ரூ. 40 லட்சம் மதிப்பில் நுனாக்காடு ஊராட்சி தென்பாதி பகுதியில் புதிய துணை ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட முடிவு செய்து கட்டுமான பணியை ஊராட்சி தலைவர் அஞ்சா. சின்னையன், தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி துணைத் தலைவர் த.துரைராஜ், ஒன்றிய கவுன்சிலர் பத்மாமதியழகன், ஊராட்சி செயலாளர் தெ.இளங்கோவன், ஒப்பந்ததாரர் செந்தில்நாதன், ஊராட்சி உறுப்பினர்கள் வே.கோவிந்தராஜ், உ.சாமூண்டீஸ்வரி, அ.மேனகா, ஆ. ஜெயந்தி, ரா.மைனாவதி, ராஜா ராமன், சத்யா செல்வம், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.