அச்சக தொழிலாளி தற்கொலை
அச்சக தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து ெகாண்டார்.
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 27). இவர் அச்சகத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் வேல் முருகனுக்கு பக்கவாத நோய் தாக்கியது. இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானர். இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி தனலட்சுமி சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.