வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
விளாத்திகுளம் அருகே வருமுன் காப்போம் மருத்துவ முகாமை, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் இந்து நாடார் உயர்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் மருத்துவ தேவைகள் குறித்து கேட்டறிந்தார். முன்னதாக அங்கன்வாடி பணியாளர்களால் தயார் செய்யப்பட்ட ஊட்டச்சத்துள்ள உணவுகள் கண்காட்சி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலர் ரவீந்திரன், புதூர் தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, ராமசுப்பு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், ஆற்றங்கரை ஊராட்சி மன்ற தலைவர் சீத்தாராமன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி சோலைசாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் வேலுச்சாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் பாலகிருஷ்ணன், சென்னை குமார் உட்பட வார்டு செயலாளர்கள், வார்டு கவுன்சிலர்கள், மருத்துவத்துறை அதிகாரிகள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் விளாத்திகுளம் அருகே விபத்தில் இறந்த சுப்பிரமணியன், அருமைநாயகம் ஆகியோரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதில் விளாத்திகுளம் தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்
பின்னர் புதூர் ஊராட்சி ஒன்றியம் மாதலபுரம் கிராமத்தில் ரூ.2 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் புதிய பாலம் கட்டப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்து பணிகளை விரைவில் முடித்திட அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் எம்.எல்.ஏ. அறிவுரை வழங்கினார் இதில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.