வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

சோழவரம் கிராமத்தில் நடந்த வருமுன் காப்போம் மருத்துவ முகாமில் ஒ.ஜோதி எம்.எல்.ஏ. பங்கேற்றார்.

Update: 2022-09-17 18:45 GMT

தூசி

வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே உள்ள சோழவரம் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.

சிறப்பு அழைப்பாளராக செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து, கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு பெட்டகத்தை வழங்கி பேசினார்

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பார்வதி சீனிவாசன், வெம்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் மாமண்டூர் டி.ராஜி, வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.சங்கர், வெம்பாக்கம் மத்திய ஒன்றிய செயலாளர் சீனிவாசன், செய்யாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் ஞானவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்