வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

ஓரவந்தவாடி கிராமத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாமை சரவணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

Update: 2023-09-24 12:27 GMT

செங்கம்

செங்கம் அருகே ஓரவந்தவாடி ஊராட்சியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது. முகாமை சரவணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், அரசு மருத்துவமனைகளை தேடி மக்கள் செல்லும் காலங்களை கடந்து தற்போது அரசு டாக்டர்கள் வருமுன் காப்போம் திட்டங்கள் மூலம் மக்களைத் தேடி வந்து மருத்துவம் பார்க்கும் அரசாக தி.மு.க. செயல்பட்டு வருகிறது.

கிராமப்புறங்களில் உள்ள மக்கள் இந்த முகாம்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

முகாமில் ஒன்றியக்குழு தலைவர் சுந்தரபாண்டியன் கவுன்சிலர்கள் பவ்யாஆறுமுகம், முனியப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா, ஊராட்சிமன்ற தலைவர் விஜயலட்சுமி உள்பட அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்