சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

Update: 2023-01-19 19:55 GMT

சமயபுரம்:

சமயபுரம் மற்றும் மண்ணச்சநல்லூர் பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலின் உப கோவிலான போஜீஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும், அதைத்தொடர்ந்து தீபாராதனையும் நடைபெற்றது. இதையடுத்து போஜீஸ்வரருக்கும், ஆனந்தவல்லி தாயாருக்கும் தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் சமயபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், மண்ணச்சநல்லூரில் உள்ள பூமிநாதசுவாமி கோவில், ஏகாம்பரநாதர் கோவில், அழகியமணவாளம் மேற்றலீஸ்வரர் கோவில், திருப்பட்டூரில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவில், திருப்பைஞ்சீலி நீலிவனநாதர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களிலும் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதேபோல் முசிறி சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் சுவாமி மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. அண்ணாமலையார் கோவிலிலும் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்