சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

மதுரையில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.

Update: 2023-08-28 20:07 GMT

மதுரையில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.

பிரதோஷ வழிபாடு

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று மாலை பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதே போல இம்மையில் நன்மை தருவார் கோவிலில் நேற்று மாலை பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி நந்திபெருமானுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து புதிய பட்டாடை அணிவித்து மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன்பின்னர் பிரதோஷ நாயகர் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா வந்தனர். ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு மதுரை அச்சம்பத்து பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் உள்ள சோமசுந்தரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால்சுனை கண்ட சிவபெருமான் கோவிலிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.

பாலமேடு

பாலமேடு பஸ் நிலையம் அருகில் உள்ள சிவன் கோவிலில் நேற்று மாலை ஆவணி மாத பிரதோஷ பூஜைகள் நடந்தது. இதில் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகளும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது. மேலும் அங்குள்ள நந்தி சிலைக்கு பால், பழம், பன்னீர், விபூதி, வில்வம், சந்தனம், புஷ்பம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

அலங்காநல்லூரில் உள்ள அய்யப்பன் கோவில் உள் பிரகாரத்தில் இருக்கும் சிவன் கோவிலில் பிரதோஷ பூஜைகள் நடந்தது.

ேசாழவந்தான்

சோழவந்தான் பிரளயநாதர் கோவிலில் சோமவாரபிரதோஷ விழா நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு நந்திபெருமானுக்கு 12 திரவிய பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்று, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.சுவாமியும், அம்பாளும் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தை சுற்றிவந்தனர். சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதே போல் திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவில் மன்னாடிமங்கலம் மீனாட்சிசுந்தரேசுவரர் கோவில், சோழவந்தான் பேட்டை அருணாசல ஈசுவரர் கோவில், திருவலவாயநல்லூர் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில், விக்கிரமங்கலம் கோவில்பட்டி மருததோய ஈஸ்வரமுடையார் கோவில், தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாதசுவாமி கோவில் உள்பட சிவாலயங்களில் பிரதோஷ விழா நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலூர்

மேலூரில் யூனியன் அலுவலகம் அருகிலுள்ள முத்துமாரியம்மன் கோவிலில் உள்ள சிவபெருமானுக்கு பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலூர் அருகே தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் உள்ள கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம் சுவாமி, சங்கர நாராயணர் சுவாமி கோவிலில் ஆவணி மாத சோமவார, வளர்பிறை பிரதோஷ சிறப்பு பூஜை, அர்ச்சனை அலங்கார வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்