சதுரகிரி கோவிலில் பிரதோஷ வழிபாடு

சதுரகிரி கோவிலில் பிரதோஷ வழிபாடு பக்தர்கள் இன்றி நடந்தது

Update: 2022-11-21 19:13 GMT

வத்திராயிருப்பு, 

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. தற்போது வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் தொடர்ச்சியாக பெய்த மழையின் காரணமாகவும், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் உள்ள வழுக்குப் பாறை, சங்கிலி பாறை, பலாவடி கருப்பசாமி கோவில் ஓடை பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளதாலும் பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பிரதோஷ சிறப்பு வழிபாடும் பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்