அரங்குளநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

அரங்குளநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

Update: 2023-07-01 19:10 GMT

திருவரங்குளத்தில் அரங்குளநாதர் கோவிலில் சனி பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், தேன் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மூலஸ்தானத்தில் உள்ள சுவாமி-அம்பாளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் காளை வாகனத்தில் சிவபெருமான் எழுந்தருளி 3 முறை பிரகாரத்தை சுற்றி வந்தார். இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் திருவுடையார்பட்டி திருமூலநாதர் சமேத திரிபுரசுந்தரி அம்மன் கோவில், திருக்கட்டளை சோமசுந்தரேஸ்வரர் சமேத மங்களநாயகி அம்மன் கோவில், திருமலை ராயசமுத்திரம் கதிர்காமேஸ்வரர் சமேத கதிர்காமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சனிபிரதோஷம் நடைபெற்றது.

இதேேபால் ஆவுடையார்கோவில் வடக்களூர் ஆதிகைலாசநாதர் கோவிலில் சனி பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்