பிரதோஷ வழிபாடு
மேலூர் அருகே தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம் சுவாமி, சங்கர நாராயணர் சுவாமி கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது
மேலூர்
மேலூர் அருகே தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம் சுவாமி, சங்கர நாராயணர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு சித்திரை மாத தேய்பிறை சோமவார பிரதோஷ சிறப்பு பூஜை, அர்ச்சனை அலங்கார வழிபாடு நடைபெற்றது. சங்கரலிங்கம் சுவாமிக்கும், நந்தியம்பெருமானுக்கும் எண்ணெய் காப்பு சாற்றி, மஞ்சள், பஞ்சகவ்யம், பச்சரிசி மாவு, திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், கரும்பு சாறு, பழச்சாறு, பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம், சந்தனம், பன்னீர், திருநீர் போன்ற 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் கோமதி அம்மன், சங்கரலிங்கம் சுவாமியும், நந்தி பெருமானும் சர்வ அலங்காரத்தில் அருள்புரிந்தனர். பிரதோஷ மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, சங்கு நாதம் முழங்க, தீப ஆராதனைகளுடன் ேகாவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர்.