சகாதேவ சித்தர் கோவிலில் பிரதோஷ பூஜை
சோமசமுத்திரம் சகாதேவ சித்தர் கோவிலில் பிரதோஷ பூஜை;
சோளிங்கர்
சோளிங்கரை அடுத்த சோமசமுத்திரம் கிராமத்தில் அமைந்துள்ள சகாதேவ சித்தர் கோவிலில் ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிவலிங்கத்திற்கு பல்வேறு வகையான நறுமண பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து நந்தி பகவானுக்கு பால், தேன், தயிர் சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, அருகம்புல் மாலை, மலர் மாலை அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
இந்த சிறப்பு பூஜையில் கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.