கோடைகால கால்பந்து பயிற்சி முகாம்
கோடைகால கால்பந்து பயிற்சி முகாம் நடைபெற உள்ளது
இளையான்குடி
இளையான்குடி ஸ்டார் முஸ்லிம் கால்பந்தாட்ட குழுவின் 5-ம் ஆண்டு கோடைகால கால்பந்து பயிற்சி முகாம் நடைபெறுகின்றது. நாளை(திங்கட்கிழமை) முதல் காலை 6.30 மணி முதல் 8:30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் ஸ்டார் முஸ்லிம் கால்பந்தாட்ட குழு மைதானத்தில் பயிற்சி முகாமில் திறமையான பயிற்சியாளர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மாணவர்கள் இதை பயன்படுத்தி விளையாட்டு திறனை மேம்படுத்தி கொள்ளவும், உடல் தகுதியினை மேம்படுத்தி கொள்ளவும் ஸ்டார் முஸ்லிம் கால்பந்தாட்ட குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.