மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம்
சிவகங்கையில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
சிவகங்கை கோட்ட அளவிலான மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 1-ந் தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை சிவகங்கையில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் பகிர்மானம் அலுவலகத்தில் மேற்பார்வை பொறியாளர் குருசாமி தலைமையில் நடைபெறுகிறது. எனவே சிவகங்கை கோட்டத்தை சேர்ந்த மின் பயனீட்டாளர்கள் மற்றும் விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு மின்வாரியம் தொடர்பான தங்களது குறைகளை தெரிவித்து தக்க நிவாரணம் பெறலாம். இத்தகவலை மேற்பார்வை பொறியாளர் குருசாமி தெரிவித்துள்ளார்.