சுருளிப்பட்டி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
சுருளிப்பட்டி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
கூடலூர் அருகே வண்ணாத்திப்பாறை துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இதையொட்டி குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, லோயர்கேம்ப், மேல்மணலாறு, கீழ்மணலாறு, ஹைவேவிஸ், மகாராஜாமெட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை சின்னமனூர் மின்வாரிய செயற்பொறியாளர் ரமேசுகுமார் தெரிவித்துள்ளார்.