கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்.!
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதலாவது அணு உலையின் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.;
நெல்லை,
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த 2 உலைகள் மூலம் இரண்டு ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில், முதலாவது அணு உலையின் டர்பைனில் திடீரென கோளாறு ஏற்பட்டது. கோளாறு காரணமாக மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. கோளாறை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.