இன்று, நாளை மின்தடை

மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று, நானை மின்சாரம் நிறுத்தும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

Update: 2023-05-14 18:45 GMT

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அருகே உள்ள கீரனூர் பீடரில் இன்று(திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே கீரனூர், செல்வநாயகபுரம், நல்லூர், கிடாதிருக்கை, கொண்டுலாவி, மேலபண்ணக்குளம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில். இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை முதுகுளத்தூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மாலதி தெரிவித்தார்.

இதேபோல கடலாடி துணை மின் நிலையத்தில் இருந்து ஏனாதி மின் பாதையில் நாளை (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. எனவே ஏனாதி, ஆப்பனூர், மங்களம், தேவர்குறிச்சி, ஒருவானேந்தல், இளஞ்செம்பூர், புனவாசல், பொதிகுளம் உள்ளிட்ட சுற்று வட்டாரபகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை முதுகுளத்தூர் செயற்பொறியாளர் மாலதி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்